!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 20 ஜூலை, 2016

பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு நாளை முடிகிறது மருத்துவ படிப்பை உதறி தள்ளிவிட்டு பொறியியலை தேர்ந்தெடுத்த 10 பேர்

பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) முடிகிறது. மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தும் அதனை உதறி தள்ளிவிட்டு 10 பேர் பொறியியல் படிப்பை தேர்ந்து எடுத்தனர்.


பொது கலந்தாய்வு
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வை கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கியது. இந்த வருட கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் இடங்கள் வந்திருந்தன. நேற்றைய நிலவரப்படி கலந்தாய்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 782 மாணவ–மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 75 ஆயிரத்து 234 பேர் இடங்களை தேர்ந்து எடுத்தனர். கலந்தாய்வுக்கு 39,157 மாணவ–மாணவிகள் வரவில்லை.

மெக்கானிக்கல் பிரிவை 16,683 பேரும், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை 14,412 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 12,830 பேரும், எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவை 8,431 பேரும் தேர்ந்து எடுத்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வில் ஆரம்பத்தில் 2–வது இடத்தில் இருந்த மெக்கானிக்கல் பிரிவு சில நாட்களுக்கு முன்னர் முதல் இடத்தை பிடித்தது.

மருத்துவ படிப்பை உதறிய 10 பேர்
இந்த வருடம் நடந்த மருத்துவ கலந்தாய்வில் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்த 10 மாணவர்கள், அதை உதறி தள்ளிவிட்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்டு இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்த மாணவர்களே இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இப்போதைய நிலவரப்படி கடந்த ஆண்டைவிட 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் பொறியியல் இடங்கள் குறையும் என கூறப்படுகிறது.

நாளை முடிகிறது
பொறியியல் பொது கலந்தாய்வு நாளையுடன் (வியாழக்கிழமை) முடிகிறது. தொழில்கல்வி மாணவர்களுக்கு கலந்தாய்வு 23–ந் தேதி தொடங்குகிறது. அன்று முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பின்னர் இதர மாணவ–மாணவிகளுக்கும் நடக்கிறது. 24–ந் தேதி அந்த கலந்தாய்வு முடிகிறது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png